செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கும் freshworks நிறுவனம் - ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

03:32 PM Nov 08, 2024 IST | Murugesan M

பங்குதாரர்கள் பங்குகளை வாங்குவதன் மீது அதீத கவனம் செலுத்தும் பணக்கார நிறுவனத்திடம்  ஊழியர்கள் விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா என்று ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

பிரபல நிறுவனமான ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்து வருகிறது.  இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள ஜோஹோ நிறுவன சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு, எதிர்பார்த்த லாபம் ஏற்படவில்லை என்றால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இயல்பானது என்றும் ஆனால் வெற்றிகரமாக இயங்கிவரும் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவது அந்நிறுவனத்தின் பேராசையை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கார்ப்பரேட் உலகில் இது மிகவும் பொதுவானதாகி விட்டதாகவும் அவர் வேதனை  தெரிவித்துள்ளார்.  முதலில் வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கடைசியில் தான் பங்குதாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDfresh work layoffslayoffsMAINSridhar VembuSridhar Vembu CEO of Zoho CorporationUS corporate world
Advertisement
Next Article