செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்! - டிடிவி தினகரன்

03:08 PM Dec 17, 2024 IST | Murugesan M

திமுகவை வீழ்த்த நினைக்கும் யாராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எப்படி வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும், இதனால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிலும் வாய்ப்புள்ளது.

Advertisement

மத்திய அரசு, தமிழக அரசை மாற்றான் தாய் மனபக்குவத்துடன் நடத்தவில்லை. புயல், வெள்ள பாதிப்பின் போது மத்தியக்குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசு ஆயிரம் கோடி நிதியை தமிழகத்திற்கு வழங்கியது.

பாஜக, அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை, தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் வந்துள்ளது. அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பட்டால் 2026- க்கு பிறகு அதிமுக இருக்குமா ? என்கிற கேள்வி எழுகிறது. 2026-ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.

2026- ல் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் பிற கட்சிகளுக்கு தான் பலனாக அமையும், எடப்பாடி பழனிச்சாமியின் 4 ஆண்டு ஆட்சியின் ஊழல் பயத்தால் திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது.

கோடநாடு கொலை வழக்கு, அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது. அதிமுகவில் என்னுடைய சிலிப்பர் செல்கள் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகயால் முன்னாள் அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும், பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.

திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்  என கூறினார்.

Advertisement
Tags :
ADMKAIADMK should come to NDA alliance to avoid destruction! TTV DhinakaranMAIN
Advertisement
Next Article