அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - செங்கோட்டையன் Absent!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
2025- 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆனால் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்தும், டாஸ்மாக் ஊழல் பற்றியும் விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் செங்கோட்டையன் மட்டும் எழுந்து நிற்காமல் இருப்பிடத்திலேயே அமர்ந்திருந்தது அதிமுக வட்டராத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.