அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர்.
தொடர்ந்து அரங்கிற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அரசு கபட நாடகமாடுவதாகவும்,
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
F4 கார் பந்தயம் போன்று ஆடம்பர செலவுகள் செய்து மக்கள் பணத்தை திமுக அரசு வீண்டித்ததாகவும் அதிமுக பொதுக்குழுவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு விரைந்து மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும்,, தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.