செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு - விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு!

06:30 PM Nov 07, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

அதிமுக பொதுக்குழு தொடர்பான  வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன.

Advertisement

அப்போது, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022ம் ஆண்டு தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு நீதிபதி ஜெயசந்திரன் பரிந்துரைத்தார்.

Advertisement
Tags :
FEATUREDMAINmadras high courtJustice Jayachandranaiadmk case
Advertisement