அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!
04:22 PM Mar 29, 2025 IST
|
Murugesan M
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
2021 தேர்தலின்போது கே.சி.வீரமணி வேட்புமனுவில் தவறான தகவல்களை வழங்கியதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் திருப்பத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கே.சி.வீரமணி மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணி நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement