அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ஒரு வாரத்தில் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு : தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார்!
12:48 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மீது ஒரு வாரத்தில் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி அளித்துள்ளது.
Advertisement
2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நீதிபதி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், இதுதொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Advertisement