For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அந்த சார் யார் என்று கேட்டால் இவர்களுக்கு சுர் என்று கோவம் வருகிறது! - தமிழிசை விமர்சனம்

01:25 PM Dec 31, 2024 IST | Murugesan M
அந்த சார் யார் என்று கேட்டால் இவர்களுக்கு சுர் என்று கோவம் வருகிறது    தமிழிசை விமர்சனம்

தமிழகத்தில் பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

எல்லாருக்கும் முன் கூட்டியே என்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியும் செல்வத்தையும் தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். கட்சி விஷயம் சார்பாக தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க டெல்லி செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பற்றி விவரிக்கவும், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக நிகழ்வுகளில் பெண்களுக்கு நடக்கும் பாதிப்புகள் தொடர்பாகவும் நட்டா அவர்களிடம் பேச உள்ளேன்.

Advertisement

நேற்று ஏதோ பெண்கள் தமிழகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு பொறுப்பு இவர்கள் என்று தமிழக முதலமைச்சர்கள் பேசி வருகிறார்.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. பாரதியார் அதற்கு வித்திட்டார். காமராஜர் கல்வி கண் கொடுத்துள்ளார்கள் .

பாஜக ஆளும் மாநிலங்களில், லட்சாதிபதியாக பெண்களை மாற்றி வருகிறோம். திமுக டாஸ்மாக் கொண்டு வந்து அனைத்து மகளிரும் கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார்கள், எந்த வாக்குறுவதிலும் சரியாக நிறைவேற்றவில்லை ஆனால் விளம்பரம் மட்டும் திமுக செய்கிறார்கள்.

திராவிட ஸ்டாக் என்று பெருமை கொள்கிறேன் என்கிறார் ஸ்டாலின். பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று பாஜக நினைப்பதாக அவர் சொல்கிறார்.

பாஜக ஆட்சியில் தான் ராணுவ அமைச்சர், நிதி அமைச்சர் என அனைவரும் பெண்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தமிழக காவல்துறையின் மீதும்,  அரசு மீதும் நம்பிக்கை இல்லாமல் நீதிமன்றங்கள் தலையிடும் மோசமான நிலை  தமிழகத்தில் உள்ளது.

யார் பின்புலத்தில் இருக்கிறார்கள் அந்த சார் யார் என்று கேட்டால் இவர்களுக்கு சுர் என்று கோவம் வருக்கிறது.

தமிழகத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணி கட்சிகள், பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கும் இடங்களில் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக எந்த கருத்தும் சொல்லவில்லை.

பெண் குழந்தைகள் பாதிக்கும் வரை கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவர்களுக்கு ஓட்டு மட்டும்தான் வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

பிரதமர் மோடி ஆழ் மனதில் இருந்து தமிழிடம் மனதார அன்பு கொண்டிருக்கிறார், என்று எங்களுக்கு தான் தெரியும். பிரதமர் தமிழைப் பற்றி சொன்னால் கூட நாடகம் என்று சொல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்கள்.

தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை பார்க்கிறார்கள் நன்றி சொல்கிறார்கள், ஆனால் ஒத்துழைப்பு தரவில்லை என்று தூக்கத்தில் கூட சொல்லிக் கொள்கிறார்கள். என்ன திட்டத்திற்கு நிதி கொடுத்தார்களோ அந்த திட்டத்திற்கு அதை முறையாக பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

சிஏஜி அறிக்கையில் கொரோனா போன்றவற்றில், பெண்களுக்கான திட்டத்தில் நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று உள்ளது.

மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் ஒத்துழைப்பு கொடுக்காமல் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement