செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

03:57 PM Jan 04, 2025 IST | Murugesan M

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், அந்த மாணவியிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமையின் போது ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை தான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

ஞானசேகரன் ஒருவரை தொடர்பு கொண்டதாகவும், அந்த சாருடன் இருக்குமாறு தம்மிடம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறியதாகவும், ஞானசேகரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது தாம் மிரட்டிவிட்டு வந்து விடுவேன் என ஞானசேகரன் பேசினார் என்றும் மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஞானசேகரனின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோது அவரது கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

அந்த நபரை பிடித்து விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campusChennaichennai policeDMKFEATUREDGnanasekaran arrestguindyMAINsitspecial investigation teamstudent sexual assaulttamilnadu governmentwho is that sirயார் அந்த சார்
Advertisement
Next Article