செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பான வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு!

11:32 AM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisement

அரியலூரில் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக அமைச்சர் சிவசங்கர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் உடனடி அபராதம் விதிக்கலாம் என யோசனை வழங்கிய நீதிபதி, அமைச்சர் சிவசங்கர் மீதான இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
madras high courtMAINMinister Sivashankarprotest without permission.
Advertisement