அனுமன் ஜெயந்தி! : நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தி வழிபாடு!
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது.
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனுமன் ஜெயந்தியையொட்டி வெள்ளி காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராம ஜெயம் என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.