அனைத்து தரப்பினருக்கும் பள்ளிக்கல்வி - பிரதமர் மோடி உறுதி!
நாடு முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக மத்திய அரசு பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படுவதன் மூலம், அதிகளவிலான மாணவர்கள் பயனடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், 28 நவோதயா பள்ளிகள் தொடங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதன் மூலம் குடியிருப்புகள் மற்றும் பள்ளிக் கல்வியின் தரம் பெரியளவில் விரிவடையும்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையின்படி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.