For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அனைத்து ரயில் நிலையங்களிலும் UTS செயலி சேவை

05:41 PM Jul 14, 2023 IST | Murugesan M
அனைத்து ரயில் நிலையங்களிலும் uts செயலி சேவை

இரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மேலும் குறிப்பாக நீண்ட தூர பயணம் செய்வது என்றால்   மக்கள் இரயில் பயணத்தையே அதிகம் விரும்புவார்கள். மேலும் இரயில் பயணம் என்பது மற்ற பயணங்களைக்  காட்டிலும் வசதியானது, கட்டணங்களும் குறைவாக உள்ளது. இந்நிலையில்,  பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு பயன்தரும் வகையில் இந்திய இரயில்வே துறை பல நல்ல நடவடிக்கைகளை  செய்து வருகிறது.

Advertisement

அந்த வகையில்  இப்போது புதிதாக, (Unreserved Ticketing System) UTS on Mobile என்று அதிகாரப்பூர்வமான எளிதில் பயணச்சீட்டு பெற உதவும்  செயலியை அனைத்துத்  தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளும்  வகையில் வெளியிடடு உள்ளது .  இந்தச்  செயலியின் முக்கிய நோக்கமே பயணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை மிக எளிதில்  முன்பதிவு செய்து கொள்ள முடியும்.  இந்த செயலி மூலம் பயண சீட்டுகள், சீசன் டிக்கெடுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்கலாம். இதன் காரணமாக இனி இரயில் நிலையங்களுக்குச்  சென்று வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

ஏற்கெனவே IRCTC என்ற செயலி  மற்றும்
இணையத்தளத்தை வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்யப் பயன்படுத்தி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த (Unreserved Ticketing System) UTS on Mobile செயலி மூலம் ஏற்படும் நன்மைகள்
டிஜிட்டல் டிக்கெட்டாக பயன்படுத்த முடிகிறது. இதனால் டிக்கெட் எடுப்பது சுலபமாகிறது. டிக்கெட் எடுத்தவுடன் இதில் தேவைப்படும்போது இணையம் இல்லாமலும் இந்த டிஜிட்டல் டிக்கெட்டை காட்டலாம்.முக்கியமாக, இந்த டிஜிட்டல் டிக்கெட்டை பதிவு செய்து பெற்று, ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் பயணம் அமைய வேண்டும். சீசன் டிக்கெட்டுகளும் இதில் எடுத்துக் கொள்ளலாம், புதுப்பித்தும் கொள்ளலாம்.

ஒரே ஒரு கட்டுப்பாடு இரயில் நிலையத்தில் அருகில் இருந்து மட்டும் தான் இந்தச் செயலி மூலமாக முன்பதிவு செய்ய முடியும் .

Advertisement
Tags :
Advertisement