அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் - கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து!
12:30 PM Dec 25, 2024 IST
|
Murugesan M
தேவாலயத்தின் திருச்சபை தந்தை கேட்டுக் கொண்டதன் பேரிலேயே சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றதாக கூறிய அண்ணாமலை, தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ இறைவனிடம் வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.
தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கிறிஸ்துமஸ் திருநாள் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். தான் தேவாலயத்திற்கு செல்வது புதிதல்ல எனவும், 7 ஆண்டுகள் கிறிஸ்தவ பள்ளியிலேயே பயின்றதால் தேவாலயத்துக்கு செல்லும் பழக்கம் உண்டு என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Next Article