அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
Advertisement
தி.மு.க எம்.பி. கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்பட 4 இடங்களில் கடந்த 3-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சோதனையின் முடிவில் கல்லூரியின் சர்வர் அறைக்கு சீல் வைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராகக்கோரி கதிர் ஆனந்த்துக்கு சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.