அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!
06:54 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜரானார்.
Advertisement
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக எம்பி கதிர் ஆனந்த் சிக்கினார்.
மேலும், கடந்த 21-ம் தேதி அவர் தொடர்பான இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.
Advertisement
இதில், 13 கோடி ரூபாய் ஆவணங்கள், 75 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகிவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 22 -ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜரானார்.
இந்நிலையில், மேல் விசாரணைக்காக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து ர்.
Advertisement