அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
சட்டவிரோத பணிப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது உரிய விதிமுறைகளை பின்பற்றாத அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை முதன்மை நீதிமன்றத்தில் உள்ள அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எதனடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
மேலும், செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் கூறியதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.