செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமானுஷ்யம் சாத்தான் - இது மீரட் திகில்!

08:45 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முன்னாள் கப்பல் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அமானுஷ்யம், சாத்தான் எனத் திகிலைக் கிளப்புகிறது மீரட் கொலை. இது பற்றி தற்போது பார்க்கலாம்.

Advertisement

மங்கலான வெளிச்சம்... உடைந்த சுவர்கள்... போர்வைகளால் மூடப்பட்ட ஜன்னல்கள்... சிதறிக்கிடக்கும் மதுபுட்டிகள்... சுற்றிலும் காணப்படும் சிகரெட் பாக்கெட்டுகள்... ஆங்காங்கே சாத்தானின் அடையாளங்கள்... "நீ எங்களுடன் பயணிக்க முடியாது" என்ற வாசகம்.

கேட்பதற்கு வித்தியாசமாகவும் விபரீதமாகவும் இருக்கும். இவை அனைத்தையும் ஓர் அறையில் பார்த்தபோது காவல்துறையினருக்குப் பேச்சே வரவில்லை. பேய்ப் படங்கள் மற்றும் திகில் கதைகளில் வரும் இப்படியோர் அறையில் வசித்த SAHIL என்ற இளைஞரும் சாதாரணமானவரல்ல... இன்னொருவரின் மனைவியை மயக்கி தமது காதலி ஆக்கியதுடன் அவரை வைத்தே கணவரைக் கொலை செய்த பயங்கரமான நபர்தான்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மார்ச் 4-ஆம் தேதி  இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. கொல்லப்பட்டவர் முன்னாள் கப்பல் அதிகாரி SAURAB RAJPUT. இது சாதாரண கொலை அல்ல... அமானுஷ்ய நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்ட SAHIL, சாத்தானின் பெயரால் கொடுத்த நரபலி என சந்தேகிக்கிறது காவல்துறை.

SAURAB RAJPUT-ம் MUSKAN RASTOGI என்ற பெண்ணும் 2016-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த SAURAB தம்பதியின் வாழ்க்கை SAHIL என்பவரின் வருகையால் தடம்புரண்டது. MUSKAN-ம் SAHIL-ம் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பள்ளி WAHTSAPP குழு மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

அமானுஷ்ய செயல்களில் ஈடுபடும் SAHIL சில சித்து விளையாட்டுகளைப் பயன்படுத்தி MUSKAN-ஐ வசியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கணவர் மற்றும் குழந்தையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக MUSKAN-ஐ தனிமைப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகுவதை அறிந்து விவாகரத்துப்பெற முயன்றுள்ளார் SAURAB. எனினும் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு நடந்த பிறகும் SAHIL உடன் பழகுவதை MUSKAN விடவில்லை அல்லது அவரால் விட முடியவில்லை. இந்த நிலையில் வேலைக்காக SAURAB லண்டன் சென்றுவிட MUSKAN-ஐ மொத்தமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் SAHIL.

இதையறியாத SAURAB, மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன்பே தூக்க மாத்திரைகள், கத்தி ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு கணவரைக் கொலை செய்யத் தயாராக இருந்தார் MUSKAN. அதற்கு முழுக்காரணம் SAHIL.

"நீ SAURAB-ஐ கொலை செய்தால் நாம் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்" என்று கூறி MUSKAN-ஐ தயார்ப்படுத்தியது SAHIL-தான். திட்டமிட்டபடி மார்ச் 4-ஆம் தேதி SAURAB-க்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார் MUSKAN.

அவர் சுயநினைவை இழந்ததும் கொலை செய்வதே PLAN என்றாலும் MUSKAN தயங்கியிருக்கிறார். ஆனால் அவரை வற்புறுத்திய SAHIL, கணவர் SAURAB-ன் நெஞ்சு மீது அமர வைத்தார். சமையற்கட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்த SAHIL எப்படிக் குத்த வேண்டும் எனப் பாடமெடுத்துள்ளார்.

அவரது கட்டளைப்படி SAURAB-ன் நெஞ்சில் மூன்று முறை குத்தியிருக்கிறார் MUSKAN. பின்னர் உடலைப் பல துண்டுகளாக வெட்டிய இருவரும் அதைத் தண்ணீர் பிடித்து வைக்கும் 220 லிட்டர் கொள்ளளவு கொண்ட DRUM-க்குள் போட்டு CEMENT-ஐ வைத்துப் பூசியுள்ளனர். இதற்காக 50 கிலோ CEMENT-ம் முன்பே வாங்கப்பட்டிருந்தது.

இவ்வளவையும் செய்துவிட்டு சிம்லாவுக்குச் சென்ற அவர்கள் அங்கு உற்சாகமாக ஹோலி கொண்டாடியதுடன் அதை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். சிம்லாவில் இருந்து மணாலி சென்று SAHIL-ன் பிறந்தநாளைக் கொண்டாடிய இருவரும் அதுதொடர்பான வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.

உல்லாசப் பயணத்தை முடித்துக்கொண்டு மீரட்டுக்கு திரும்பிய MUSKAN-ம் SAHIL-ம் எதுவுமே நடக்காதது போல இருந்துள்ளனர். அப்படியிருந்தும் MUSKAN-ன் பெற்றோர் மூலம் இந்தக் கொடூரம் வெளிவந்துள்ளது. கணவர் எங்கே என்ற கேள்வியை எளிதாகச் சமாளித்துவிடலாம் என்று நினைத்த MUSKAN, வேறு வழியின்றி பெற்றோரிடமே உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

MUSKAN-ஐயும் SAHIL-ஐயும் கைது செய்துள்ள காவல்துறையினர் DRUM-ஐ உடைத்து SAURAB-ன் உடலைக் கைப்பற்றினர். விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட SAHIL மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து அவரையும் MUSKAN-ஐயும் காப்பாற்ற எந்த சாத்தானும் வரவில்லை. இனி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து அமானுஷ்யங்கள் உண்மையா? பொய்யா? என்பதை அவர் சோதித்துப் பார்க்கலாம்.

Advertisement
Tags :
முன்னாள் கப்பல் அதிகாரி கொலைFEATUREDMAINParanormal Satan - This is Meerut Horror!உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்
Advertisement