அமெரிக்காவின் எப்பிஐ இயக்குனர் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என கூறி பணியை தொடங்கிய காஷ் படேல்!
அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா எனக் கூறி தனது பணியைத் தொடங்கிய சம்பவம் இந்துக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக அமெரிக்காவின் முதன்மை புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமனம் செய்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் எஃப்.பி.ஐ-ன் இயக்குநராக பொறுப்பேற்ற காஷ் படேல், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா எனக் கூறி தனது பணியைத் தொடங்கினார்.
இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தனது பெற்றோர் கால்களிலும் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெற்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுபோன்ற உணர்ச்சிகரமான தருணம் அரங்கேறுவது இதுவே முதல் முறை என சமூக வலைதளத்தில் பலரும் காஷ் படேலை பாராட்டி வருகின்றனர்.