அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் அனுமதி!
12:55 PM Jan 18, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
டிக்டாக் செயலி இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
Advertisement
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்கை தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Next Article