அமெரிக்காவில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மோதல் - 18 உடல்கள் மீட்பு!
01:33 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
அமெரிக்காவில் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Advertisement
அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து 64 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நதியின் மேல் தாழ்வாக பறந்து கொண்டிருந்த விமானம் மீது எதிரே வந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதியது. இதனையடுத்து அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 18 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிருடன் யாரும் இதுவரை தென்படவில்லை என்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement