அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!
11:36 AM Jan 31, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
Advertisement
தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் 67 பேர் உயிரிழந்தனர். இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். இதுவரை 25க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement