அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானம் - வங்கி அதிகாரி பலி!
09:26 AM Apr 01, 2025 IST
|
Ramamoorthy S
அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள புரூக்ளின் பூங்கா அருகே வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது.
Advertisement
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அமெரிக்க வங்கி அதிகாரியான டெர்ரி டோலன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 63 வயதான டோலன் 2023 ஆம் ஆண்டு அமெரிக்க வங்கியின் துணைத் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.
விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விமானம் விழுந்து வீடு தீப்பற்றி எரிந்த நிலையிலும், அங்கு வசித்தவர் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement