அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 5 பேர் பலி!
01:21 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவில் நடந்த அதிபயங்கர சாலை விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்தனர்.
Advertisement
டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த 18 சக்கர டிரக், கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற வாகனம் மீது மோதியது. அப்போது கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி 17 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரக் ஓட்டுநரான சாலமன் அரயா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் போதையில் வாகனம் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என ஆஸ்டின் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement