செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்கா : இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்த விமானம்!

04:21 PM Mar 15, 2025 IST | Murugesan M

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.

Advertisement

அமெரிக்காவின் கொலரோடா ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் இருந்து டல்லாஸின் போர்ட் ஒர்த்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றபோது விமான என்ஜினில் அதிர்வு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் விமான நிலையம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.

Advertisement

விமானத்தில் இருந்து 172 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும் 12 பயணிகள் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINUSA: Plane catches fire due to engine failure!அமெரிக்காதீப்பிடித்து எரிந்த விமானம்
Advertisement
Next Article