செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாக பரவும் புதுவகை வைரஸ்!

02:35 PM Aug 12, 2023 IST | Abinaya Ganesan

2019-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு செயல்திட்டம் மற்றும் நடவடிக்கைகளால் தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது, "அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய கொரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு திடீரென தொற்றுப் பரவலையும் உயிரிழப்புக்களையும் அதிகரிக்கக் கூடியதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும் இச்சூழலில் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, மரபணு பகுப்பாய்வு விவரங்களை உடனுக்குடன் உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக உயிரிழப்பு ஏதும் இருந்தால் அதுபற்றிய விவரமும், வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் தொந்தரவுகள் தொடர்பான விவரங்களையும் அளிக்க வேண்டும் எனவும்,தொடர்ந்து தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

 

Advertisement
Tags :
coroanawho
Advertisement
Next Article