அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் : டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
தனது ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Advertisement
அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் இன்று இரவு 10.30 மணிக்கு பதவியேற்க உள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற வெற்றி பேரணி விழாவில் கலந்து கொண்டு ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம் என்றும், ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர போகிறோம் எனவும் கூறினார். அமெரிக்காவில் 50 சதவீத நிபந்தனையின்பேரில் டிக்டாக்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தாம் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூளுரைத்தார்.
மேலும், எலான் மஸ்க் தலைமையில் அரசாங்க செயல்திறன் துறை உருவாக்கப்படும் எனக்கூறிய ட்ரம்ப், உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.