செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப்!

10:50 AM Jan 20, 2025 IST | Murugesan M

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக அவர் பதிவியேற்கவுள்ளார். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், இரவு 8 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா மற்றும் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், மார்க் ஜூகர்பெர்க் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஸ் அம்பானி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

பதவியேற்பு விழாவில் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Donald Trumpdonald trump inaugurationdonald trump newsFEATUREDinauguration trumpMAINTrumptrump inaugurationtrump inauguration 2025trump inauguration ceremony live 2025trump inauguration indoorstrump inauguration livetrump inauguration speechtrump latest newstrump livetrump newstrump news todaytrump speech inaugurationtrump speech todaytrump swearing intrump todayUnited Statesunited states department of homeland security
Advertisement
Next Article