For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ. 6,640 கோடி செலவு என தகவல்!

11:21 AM Nov 18, 2024 IST | Murugesan M
அமெரிக்க அதிபர் தேர்தல்   கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ  6 640 கோடி செலவு என தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயக கட்சி சார்பில் 6 ஆயிரத்து 640 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், பிரச்சாரத்துக்காக செலவு செய்தது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் விமான பயணம், உணவுக்காக  மட்டும் கமலா ஹாரிஸ் 101 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், ஜனநாயக கட்சி சார்பில் பிரச்சாரத்துக்காக மொத்தம் 6 ஆயிரத்து 640 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட வீண் செலவுகள் செய்ததாகவும், இதனால் கட்சிக்கு 168 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், ஆடம்பர செலவே கமலாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement