அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 100.
1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு 2002ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜிம்மி கார்ட்டருக்கு மறைவுக்கு அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டதாகவும், இன்றைய தினம் மிக சோகமான நாள் என்றும் தெரிவித்தார்.
ஜிம்மி கார்ட்டர் உடனான தனது 50 வருட நட்பை பகிர்ந்து கொண்ட பைடன், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட அரும்பாடுபட்டவர் என புகழாரம் சூட்டினார். மேலும், உலகம் முழுவதும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை ஜிம்மி கார்ட்டர் ஊக்குவித்ததாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு ஹரியானாவில் உள்ள கார்டர்புரி கிராம மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.