அமெரிக்க வெளியுறவு அமைச்சராகும் மார்க்கோ ருபியோ!
04:16 PM Jan 21, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ, அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Advertisement
ருபியோ, செனட் சபையின் ஒருமித்த ஆதரவுடன் 99க்கு 0 என்ற வாக்குக் கணக்கில் வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
53 வயதான ருபியோ தான், அந்நாட்டின் அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நபர் ஆவார். மேலும், சில அமைச்சர்களை உறுதிப்படுத்த இந்த வாரம் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
ருபியோ, சீனாவை கடுமையாக விமர்சிப்பவர் என்பதுடன், இஸ்ரேலுக்கு சாதகமாகவும் பேசுபவர் ஆவார்.
Advertisement
Next Article