செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி - மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!

06:50 PM Nov 20, 2024 IST | Murugesan M

சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியால், மாணவிகள் சிரமத்தை சந்தித்த அவலம் அரங்கேறியுள்ளது.;

Advertisement

சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ’மகிழ் முற்றம்’ என்ற பெயரில் இலச்சினை மற்றும் கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.பொதுவாக பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான சிறிய சிறிய ஏற்பாடுகளை மாணவர்களை வைத்தே மேற்கொள்வது வழக்கமாக இருந்தாலும், சூளைமேடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றும் நிகழ்ச்சியால், மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்தது அப்பட்டமாக வெளிப்பட்டது.

Advertisement

அமைச்சர் பங்கேற்கும் விழா என்பதால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பெரியளவில் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், மாணவ மாணவிகள் மேஜைகளையும், நாற்காலிகளையும் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றனர்.

மதிய நேரத்தில் தேர்வு நடைபெற இருந்ததால், மாணவிகள் சோர்வடைந்து விடுவர் என்பதை கூட அறியாமல், அவர்களை வேலை வாங்கியது காண்போரை கவலையடைய செய்தது.

 

Advertisement
Tags :
MAINChennaiChennai Government Girls' Higher Secondary SchoolChoolaimeduJayagopal Garodia Girls' Higher Secondary SchoolSchool Education Minister Anbil Mahesh
Advertisement
Next Article