செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி!

07:27 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சுவாமிமலை முருகன் கோயிலில் ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட மின் தூக்கி கட்டுமான பணி ஐந்து சதவீதம் கூட நடைபெறாத நிலையில்  ஜூன் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

நான்காம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோயிலில் மின் தூக்கி வசதி அமைப்பதற்கான பூமி பூஜையைக் கடந்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஓராண்டுக் காலம் நெருங்கியும் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் வெறும் ஐந்து சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

Advertisement

இந்த நிலையில்  சுவாமிமலை முருகன் கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி  ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என இந்து அறநிலையத் துறை சேகர்பாபு கூறியிருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
Tags :
Devotees shocked by Minister Shekar Babu's announcementMAINசுவாமிமலை முருகன் கோயில்
Advertisement