முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
08:05 PM Mar 21, 2025 IST
|
Murugesan M
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சை இண்டி கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒளிபரப்புவாரா? என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறை குறித்து நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரங்கேற்ற உள்ளார் என்றும் இண்டி கூட்டணி தலைவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சை முதல்வர் ஸ்டாலின் ஒளிபரப்புவாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வட இந்திய சகோதர, சகோதரிகளை அவமதிக்கவும் துஷ்பிரயோகம் செய்யவும் திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் தெரிகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement