செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!

10:13 AM Jan 20, 2025 IST | Murugesan M

கடந்த இடைத்தேர்தலில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருவதாகவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செல்லும் அமைச்சர் முத்துசாமியிடம் மக்கள் குறைகளை கூறிவரும் நிலையில், பாரதி நகரில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லை என பொதுமக்கள் முறையிட்டனர்.

Advertisement

உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது அருகாமையில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அமைச்சர் கோபத்துடன் சத்தமிட்டார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் முத்துசாமியிடம், தனது பேரனை ஏன் தூக்காமல் செல்கிறீர்கள் என ஒரு பெண் கேள்வி எழுப்பினார். உடனே, குழந்தை தூக்கி சிரித்தபடி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

Advertisement
Tags :
erodeErode East constituencyErode East constituency by electionMAINminister muthusamy
Advertisement
Next Article