For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

04:40 PM Nov 19, 2024 IST | Murugesan M
அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கட்டட திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் மூர்த்தியை குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பாலமேடு அருகே உள்ள வளையப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட உணவு கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைப்பதற்காக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வருகை தந்தார்.

Advertisement

அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் 4 ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement