செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!

09:15 PM Mar 17, 2025 IST | Murugesan M

பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.  லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான PODCAST கலந்துரையாடலி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி அறிவியல் விஞ்ஞானியும்,  AI தொழில்நுட்ப வல்லுனருமான  லெக்ஸ் பிர்ட்மென் PODCAST நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  மிகவும் பிரபலமான இந்த PODCAST நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

லெக்ஸ் பிரிட்மெனின்  PODCAST நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.  லெக்ஸ் பிரிட்மெனின் பல்வேறு கேள்விகளுக்குப் பிரதமர் மோடி ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிலளித்துள்ளார்.சுமார்  பிரதமர்  3 மணிநேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், தனது வலிமை தனது பெயரில் இல்லை என்றும், 140 கோடி இந்தியர்களும், இந்தியாவின் பண்பாடும் கலாச்சாரமும் தான் தனது வலிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

1947ம் ஆண்டு, நாடு சுதந்திரத்தை மகிழ்ச்சியைக் கொண்டாட காத்திருந்த நேரத்தில், தங்களுக்கென்று என்று தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இஸ்லாமிய தரப்பின் கோரிக்கைக்கு அப்போதைய அரசின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். பிரிவினையின் போது, இரத்தம் சிந்திய, காயமடைந்த இந்திய மக்களின் பிணங்களுடன் இரயில்கள் வரத் தொடங்கின என்று வரலாற்று ரீதியாக பிரதமர் மோடி விளக்கியிருக்கிறார்.

மேலும், தங்கள் சொந்த வழியைப் பெற்ற பிறகு,  வாழவும் வாழ விடவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எப்போதுமே இந்தியாவுடனான ஒரு சுமூகமான உறவை பாகிஸ்தான் வளர்க்க விரும்பவில்லைஎன்றும் தெரிவித்திருக்கிறார்.

2014-ம் ஆண்டில், தனது பதவியேற்கும் விழாவுக்கு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்த்தாகவும் தெரிவித்த பிரதமர் மோடி, அமைதியை ஏற்படுத்த தனிப்பட்ட முறையில் லாகூருக்குச் சென்றதாகவும், இப்படி பல வழிகளில், தான் முன்னெடுத்த அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 11  தாக்குதல்களுக்கு  முக்கிய மூளையாக செயல்பட்ட  ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் தான் தஞ்சமடைந்திருந்தார் என்றும், ஒரு வகையில் பயங்கரவாதமும் பயங்கரவாத மனநிலையும் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும், இந்த உண்மையை உலகம் முழுமையாக அங்கீகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

அமைதியை விரும்பாத பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் இந்தியாவுடன்  மறைமுக போரில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தீவிரவாதம், உள்நாட்டு குழப்பங்களால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர் என்றும் ,அதனால், நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான், அமைதி பாதைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமியான இந்தியா அமைதியைப் பற்றிப்  பேசும்போதெல்லாம், உலகம் ஏற்றுக்கொள்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, எப்போதுமே இந்தியர்கள்  அனைவருடனும் நல்லிணக்கத்தையே வளர்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
PM Modipakistanmodi newswhich does not want peaceis the center of terrorism: Prime Minister Modi takes action in the podcast!PodcastFEATUREDMAIN
Advertisement
Next Article