அம்பேத்கரின் கொள்கைளுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் - உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
அம்பேத்கரின் கொள்கைளுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
Advertisement
மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்தின்போது அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.
தனது கருத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக கூறிய அவர், அம்பேத்கருக்கும் பழங்குடியின சமூகத்துக்கும் எதிரான மனநிலையை அக்கட்சி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அம்பேத்கர் வாழ்ந்த காலகட்டத்தில் அவரை காங்கிரஸ் அப்பட்டமாக அவமதித்ததாகவும், பாஜகதான் அம்பேத்கருக்கு உரிய மரியாதை கொடுத்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கையை ராஜீவ் காந்தி கொண்டிருந்ததாக கூறிய அமித் ஷா, இடஒதுக்கீட்டை பாஜகதான் வலுப்படுத்தியதாக குறிப்பிட்டார்.