அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் - சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேர் வழக்குப்பதிவு!
03:36 PM Jan 19, 2025 IST | Sivasubramanian P
திருப்பத்தூரில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெக்குந்தி பகுதியில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்த விவகாரத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 18 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 26 பேர் மற்றும் ஆதரவு தெரிவித்த விசிக நிர்வாகிகள் 6 பேர் என மொத்தம் 32 பேர் மீது நெக்குந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement