டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் - பிரதமர் மோடி மரியாதை!
சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே, வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மலா் தூவி மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருபவருமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு தலைவணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றிற்கான டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம் ஊக்கமளிப்பதகாவும், அவரது லட்சியத்தை நிறைவேற்ற உறுதிஏற்போம் என்றும் கூறியுள்ளார்.