அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
தமிழக அரசியல் களத்தில், தான் கருவியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
Advertisement
நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" எனும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
இதில் தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்பார்கள் என செய்தி வெளியான நிலையில், அழைப்பிதழில் விஜய்யின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்துள்ள திருமாவளவன், விஜயை தவிர்க்க வேண்டும் என, தான் கூறவில்லை எனவும், மாறாக விஜய்யை வைத்தே நிகழ்ச்சி நடத்துங்கள் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் திருமா சிக்கியிருப்பதாக தகவல் பரவும் நிலையில், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டிய தைரியம் தனக்கு உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.