செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார்!

11:07 AM Feb 12, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது 83.

Advertisement

மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், பிப்ரவிரி 3ஆம் தேதி  லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் இன்று  காலமானார்.

Advertisement

அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது சீடர் பிரதீப் தாஸ் தெரிவித்துள்ளர்.  அவரது உடல் தற்போது லக்னோவிலிருந்து கோயில் நகரான அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கல் செய்தியில், ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார். அவரது இழப்பு ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Tags :
Acharya Satyendra Das passes awaybrain strokechief priest of Ayodhya's Ram Janmabhoomi TempleFEATUREDMAINSGPGIMS Lucknowuttar pradesh
Advertisement