அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை எழுப்புவது ஏற்க முடியாது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை, இந்து தலைவர்கள் பல்வேறு இடங்களில் எழுப்புவது ஏற்க முடியாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோகன் பகவத், "விஸ்வகுரு பாரதம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகள் நிச்சயம் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ வேண்டும் என தெரிவித்தார். முன்பு செய்த தவறுகளை உணர்ந்து அவற்றை திருத்திக்கொண்டு பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக பாரதம் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பிற பிரச்னைகளை போல அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரங்களை பல்வேறு இடங்களில் எழுப்புவதை ஏற்க முடியாது எனவும் அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, சிலர் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.