அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!
திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் பயிலும் வடமாநில மாணவர்கள், தமிழ் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூரில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் நிலையில், அவர்களில் ஏராளமானோர் தமிழ் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், வடமாநில மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தமிழ் வழி கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் தமிழ் கற்க சற்று சிரமமாக இருந்ததாக கூறிய வடமாநில மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு தற்போது தமிழ் கற்பது மிகவும் எளிமையாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவதே தங்கள் இலக்கு என்றும் வடமாநில மாணவர்கள் கூறினர்.