For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அரசு அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

11:24 AM Dec 17, 2024 IST | Murugesan M
அரசு அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன    சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக வழங்கப்படும் ஊதியம் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இதுகுறித்தான வழக்கு விசாரணையின்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை பார்த்த நீதிபதிகள், 2022ஆம் ஆண்டு மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

Advertisement

மேலும் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
Advertisement