அரசு சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெறும் வசதி - ஆந்திர அரசு அறிமுகம்!
09:36 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
அரசு வழங்கும் சேவைகளை வாட்ஸ்அப் செயலி மூலம் வீட்டிலிருந்தே பெறக்கூடிய வகையில் புதிய வசதியை ஆந்திர அரசு அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
இதன்மூலம், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் செயலி மூலம் அனைத்து சான்றிதழ்களையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன மித்ரா என்ற பெயரிலான வாட்ஸ்அப் கவர்னென்ஸ் சேவையை மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்த சேவை மூலமாக இந்து அறநிலையத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற முடியும் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement