செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் விவகாரம் - விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்!

07:58 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகை மாவட்டம் திருக்குவளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொண்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழ்நாடு அரசே நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் அரசாணை நகலை, விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி போது, போலீசார் அவர்களை தடுத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
Tags :
Farmers staged a protestMAINNagai district.privatization of government direct paddy procurement centersThirukkuvally
Advertisement