அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்!
01:15 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார்மனு அளித்துள்ளார்.
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு கை முறிவு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதற்கு உரிய சிகிக்சை வழங்கவில்லை எனவும், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி வற்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து விவசாயி செல்வம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
Advertisement
Advertisement