செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 120 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி!

01:55 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 120 பேரிடம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

புது காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்பவரிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி நித்தியானந்தம் என்பவர் 22 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்த போலீசார், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 120க்கும் மேற்பட்டோர் பணமோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
120 people were defrauded of Rs. 3.50 crore by claiming to be offered government jobs!MAINசேலம் மாவட்டம்
Advertisement