அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்!
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
Advertisement
மேல மைக்கேல்பட்டி கிராமத்தில் புனித சந்தன மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.
சேலம், ஆத்தூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் போட்டியில் களமிறக்கப்பட்டன. உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து தொடங்கி வைத்த இப்போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வந்த காளைகளை ஏராளமான வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.